சங்க செயல்பாடுகள்
புதுகை முத்தமிழ்ச் சங்கத் தொடக்க விழா

புதுகை முத்தமிழ்ச் சங்கத் தொடக்க விழா கடந்த 31.05.2025 சனிக்கிழமை மாலை 04.00 மணியளவில் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. குளித்தலை தமிழ்ப்பேரவைத , தலைவர் தமிழ்ச் செம்மல் முனைவர் கடவூர். மணிமாறன் அவர்கள் தலைமை வகித்தார். கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் தமிழ்ச்செம்மல் மேலைபழனியப்பன் அவர்கள் கலந்து கொண்டு புதுகை முத்தமிழ்ச் சங்கத்தை தொடங்கி வைக்கும் விதமாக சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். விழாவில் முத்தமிழ்ச் சங்கத் தலைவர் திருமதி. ஜெயா வேதாசலம் அவர்கள் எழுதிய
“நூறு கேள்விகளும் ஆயிரம் பதில்களும்”
என்ற நூலையும்
“கவிதையே கலையாதே”

என்ற கவிதை நூலையும் வெளியிட்டு தலைமை உரையில் சிறப்பாக துவக்க விழாவை நடத்திக் கொண்டிருக்கின்ற நிர்வாகிகளை பாராட்டினார். சங்கத்தின் செயல்பாடு ஆண்டு முழுவதும் மேற்கொண்டு சங்கத்தை புதுக்கோட்டையில் முதன்மையான சங்கமாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நுலாசிரியர் திருமதி. ஜெயா வேதாசலம் அவர்களின் முந்தைய நூல் வெளியீட்டு விழாக்களில் கலந்து கொண்டதை நினைவு கூர்ந்து, இன்று வெளியிடும் எட்டாவது மற்றும் ஒன்பதாவது நூல்களை வெளியிடுவதில் பெருமையடைவ தாகக் கூறினார்.
முத்தமிழ்ச் சங்கத்தை தொடக்கி வைத்து தொடக்க உரையாற்றிய திருக்குறள் பேரவைத் தலைவர் மேலை. புழனியப்பன் அவர்கள் இன்று தொடங்கப்படும் சங்கம் செம்மையாகவும் சிறப்பாகவும் செயல்பட வேண்டும் என்று வாழ்த்தியதோடு பத்தாண்டுகளுக்குப் பிறகும் சங்க ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு சங்கத்தின் வளர்ச்சியை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.


விழாவில் புதுகை முத்தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் ஜெயா வேதாசலம் அவர்கள் தமிழின் சிறப்பை பேசியதோடு குழந்தைகளுக்கு தமிழ் உச்சரிப்பை சரியாகச் சொல்லிக் கொடுக்கும் படியும் அவரவர் இல்லத்தில் அவசியம் குழந்தைகளோடு தமிழில் பேச வேண்டும் என்று வழியுறுத்தினார். அதோடு சங்க நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகளைப் பற்றி விளக்கிப் பேசினார்.


பிளஸ்-2 தேர்வில் தமிழில் 100/100 மதிப்பெண் எடுத்த மவுண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவிகு. சுவேதா அவர்களை பாராட்டி சங்கத்தின் கௌரவத் தலைவர் தமிழ்த் திரு. ப.குமாரசாமி அவர்கள் ரூ. 2000/- ரொக்கப பரிசையும் சான்றிதழையும் வழங்கி மாணவியை கவுரவித்தார். இந்த சாதனையை நிகழ்த்திய பள்ளியின் முதல்வர் நினைவுப் பரிசினைப் பெற்றுக் கொண்டார். சங்கத்தின் வலை தளத்தை துணைத் தலைவர் கவி.வெண்ணிலவன் வெளியிட்டார். புதுகை முத்தமிழ்ச் சங்கத்தின் புத்தக விற்பனைப் பிரிவினை செயற்குழு உறுப்பினர் முனைவர். அ. சகாதேவன் அவர்கள் தொடங்கி வைக்க முனைவர். கவிஞர்.ஞா.சுலோச்சனா அவர்கள் பெற்றுக் கொண்டார்


விழா நிகழ்வுகளை சங்க செயற்குழு உறுப்பினர் மருத்;துவர். திரு மதி.வே.ரம்யாமாதுரி தொகுத்து வழங்கினார்.
விழாவின் தொடக்கத்தில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.


விழாவின் இறுதியாக சங்க செயலாளர் திருமதி.உமாமகேஸ்வரி நன்றியுரை ஆற்றினார். தேசியகீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.