சங்க நோக்கங்கள்

Home - சங்க நோக்கங்கள்

சங்க நோக்கங்கள்

  • முத்தமிழான இயல், இசை நாடகத் துறைகளில் சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், பாடகர்கள் மற்றும் நாடகக் கலைஞர்களை கௌரவிக்கும் பொருட்டு மாவட்டம் மற்றும் மாநில அளவில் விருது வழங்கி ஊக்குவித்தல்.
  • தமிழ் பாடத்தில் உயர் மதிப்பெண்கள் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் பரிசுத்தொகை வழங்கி ஊக்குவித்தல்.
  • வழக்கமான அல்லது சிறப்பு நிகழ்ச்சிகளின் போது உறுப்பினர்களின் நூல்களை வெளியிடுதல்.
  • வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் எழுத்துத் திறனை மேம்படுத்த தமிழ் இலக்கணத்திற்கான பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்துதல்.
  • மாவட்ட அளவில் சிறந்த தமிழாசிரியர்களை கண்டறிந்து அவர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டுதல்.
  • பள்ளி அளவில் தமிழ் இலக்கியம் தொடர்பான கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி, வினாடி வினா நிகழ்ச்சிகள் நடத்துதல்.
  • ஆண்டுதோறும் புதுக்கோட்டையில் நடைபெறும் புத்தககண்காட்சியில் பங்கேற்று உறுப்பினர்களின் படைப்புகளை விற்பனை செய்ய உதவுதல்.