சங்க துவக்கம்
வரலாற்று சிறப்புமிக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 27.04.2025 ஞாயிறு அன்று புதுக்கோட்டை மறைமலை நகரில் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கவிஞர். தமிழ்த் திருமதி. ஜெயா வேதாசலம் அவர்களின் பெருமுயற்சியால் மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களை ஒருங்கிணைத்து புதுகை முத்தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டது. சங்கத்தை நிர்வகிக்க 15 ஆளுமைகளைக் கொண்ட செயற்குழு தேர்வு செய்யப்பட்டது. தமிழ்த்திரு. பா.குமாரசாமி அவர்கள் கெளரவத் தலைவராகவும், தமிழ்த் திருமதி. ஜெயா வேதாசலம் அவர்கள் தலைவராகவும், தமிழ்த் திரு. பா.வெற்றிவேல் (எ) கவி. வெண்ணிலவன் அவர்கள் மற்றும் தமிழ்த் திரு அழ.கணேசன் அவர்கள் துணைத்தலைவர்களாகவும், தமிழ்த் திருமதி. அ. உமா மகேஸ்வரி அவர்கள் செயலாளராகவும், தமிழ்த்திரு. கா.ச.ரவிச்சந்திரன் அவர்கள் இணைச் செயலாளராகவும், தமிழ்த் திரு. அ. சங்கீத் ராஜ் அவர்கள் துணைச் செயலாளராகவும் , தமிழ்த்திருமதி. த.முத்துலெட்சுமி அவர்கள்
பொருளாளராகவும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் சங்கத்தை தமிழ்நாடு சங்கப் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்வது என்றும் சங்கத்திற்கு வலைதளம் ஒன்று ஏற்படுத்துவது என்றும் சங்க உறுப்பினர்களாக சேர்வதற்கு நுழைவுக் கட்டணம் ரூ.100/-ம் வருடச் சந்தா ரூ.500/- ம் செலுத்துவது என்று தீராமானிக்கப்பட்டது. சங்கத் துவக்க விழாவை மே மாத இறுதியில் நடத்துவது எனவும் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.