விருதுகள்

Home - விருதுகள்

விருதுகள்

எனக்கு இந்த விருதினை வழங்கி கௌரவித்த புதுகை முத்தமிழ் சங்க தலைவர் திருமதி ஜெயா வேதாச்சலம் அவர்கள் அவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இப்படிக்கு கலை மாமணி பி எஸ் முத்துகிருஷ்ணன் வணக்கம்

எனக்கு விருது வழங்கி கவுரவித்த முத்தமிழ் சங்க நிர்வாகத்தினர் அனைவருக்கும் ஆர் கிருஷ்ணமூர்த்தி ஹார்மோனியம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வணக்கம்


இனிய வணக்கம்.


நீண்ட நாட்களுக்கு பிறகு நல்லதொரு இலக்கிய நிகழ்வில் கலந்துகொள்ளும் பேறு பெற்றேன்.புதுகை முத்தமிழ் சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளும் மிகச்சிறப்பாக விழாவை வழி நடத்திச்சென்றது பிரமிக்க வைத்தது.கண்ணுக்கும்..மனதிற்கும்..செவிக்கும் அருமையான முத்தமிழும்..மதியம் வயிற்றுக்கு சுவை மிக்க விருந்தும் மறக்க முடியாதவையாக அமைந்தது. விழாவில்
எனது தமிழ்ப்பணியை பாராட்டி விருதும்.. பணமுடிப்பும் வழங்கிய சான்றோர் பெருமக்கள் அனைவருக்கும் என் பணிவான நன்றியைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.

அன்புடன்..
கவிஞர் இல.இரவி
செ.புதூர்

எழுத்தாளர்களை, கவிஞர்களை, கலைஞர்களை, ஊக்கப்படுத்தி, தமிழ் வளர்க்கும், புதுக்கோட்டையின் புகழ் கோட்டையாக விளங்கும்,முத்தமிழ் சங்கத்திற்கு எனது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன், வரும் காலங்களில், முத்தமிழ் சங்கத்தால், புதுக்கோட்டை, கலைஞர்களின் கோட்டையாக மாறும்,அது முத்தமிழ் சங்கத்தால் நடந்தே தீரும்
நன்றி நன்றி நன்றி

கவிஞர். ம.விஜயன்
பள்ளத்தான்மனை
கறம்பக்குடி ,புதுக்கோட்டை மாவட்டம்


புரட்சிகர வாழ்த்துகள்

திறமை கோடி இருந்திட்டாலும்
தேடும் களம் கிடைத்திடாமல்
வாழும் ஏழை கலைஞனுக்கு
வரமாக வந்துதித்த பேரொளியே..!

காற்றிலும் சேற்றிலும் கரைந்து போன
காணக் கிடைக்காத திறமைகளை
போற்றி புகழ்ந்து மேடையேற்றும்
பொங்கி வந்த தமிழமுதே…!

விதையில் இருந்து வெடித்து வரும்
வெளிச்சம் கிடைக்காத திறமைக்கு
விருது எனும் நீரூற்றி
விருச்சிகமாக விளைவதற்கு
புதிய பாதை பூட்டிக் தரும்
புதுகை முத்தமிழ்ச் சங்கமே
உனக்கு
புரட்சிகர வாழ்த்துகள்…

தவப்புதல்வன்
08-02-2026

புதுகை முத்தமிழ்ச் சங்கத்தின் முப்பெரும் விழா மிகச்சிறந்த முறையில் நடைபெற்றது. அம்மா உங்கள் பாடல் என்னை மெய் சிலிர்க்க வைத்து நான் என்னை மறந்து கேட்டேன். உங்கள் குரலுக்கு வயதே ஆகவில்லை அம்மா. இன்னும் இதே போல் பல ஆயிரம் பாடல்களையும், நூல்களையும் படைத்து வெளியிட நான் இறைவனை வேண்டுகிறேன். கவிச்சுடர். கவிதைப்பிததன் ஐயா அவர்கள் உங்கள் நூல்களின் சிறப்பையும். உங்களின் பெயர் தமிழ் திருமதி வெற்றிச் செல்வி என்று பெயர் சூட்டியது உங்களுக்கே பொருந்தும் அம்மா. விழா மிகவும் சிறப்பு


வணக்கம்.

புதுகை முத்தமிழ் சங்கத்தின் சார்பில் எமக்கு வழங்கிய
விருதுக்கு மிக்க நன்றி.

கவிதைபித்தன் அவர்களின் உரை மிக சிறப்பாக இருந்தது.
அவரது வருகைக்கு முன்பே அரங்கு நிறைந்து இருந்தது என்பதை அவர் குறிப்பிட்டு பாராட்டினார்.

மருத்துவர் ரம்யா அவர்களின் விழா தொகுப்பு அருமை.

இன்னொரு குறிப்பிடத்தக்க விசயம் என்னவெனில் மேடையின் பின்புறம்
வைக்கப்பட்டிருந்த பதாகையில் வள்ளுவன், பாரதி படங்களே இருந்தது. சங்க நிர்வாகிகள் எவரின் படமும் இல்லை. விருதிலும் சங்கத்தின் பெயரே இருக்கிறது.

சங்கத்தை முன்னிறுத்திய பாங்கு நான் எங்கும் காணாதது. வாழ்த்துக்கள்.

எஸ்.இளங்கோ.

புதுகை முத்தமிழ் சங்க தலைவர் அம்மா அவர்களுக்கு இனிய தமிழ் வணக்கம்….

விருதும் பணமும் கிடைக்கப்பெற்றேன்.
மிக்க மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்..
நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொள்ள இயலாத போதும் தாங்கள் இதனை கவனத்தில் கொண்டு விருதும் பணமும் கொடுத்து அனுப்பி என்னை மேலும் மகிழ்ச்சி அடைய செய்து உள்ளீர்கள் மிக்க நன்றி…..

உடல்நிலை சரியானதும் தங்களை நேரில் சந்திக்கின்றேன்.

முத்தமிழ் சங்கத்தில் உறுப்பினராகி தங்களோடு இணைந்து தமிழ் பணியாற்ற பெரிதும் விளைகின்றேன்..

நேரில் கலந்திருந்தால் பரிசுத் தொகையை சங்கத்திற்கு நல்கி இன்னும் பேரு வகை கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கும் நழுவ விட்டேன் தமிழ் படைப்பாளிகளையும் கலைஞர்களையும் பாராட்டும் உளங்கொண்ட தங்களை மேலும் வணங்கி மகிழ்கின்றேன்…

தாங்கள் நீடு நிலைத்து வாழ இதயங்கனிந்து வாழ்த்தி மகிழ்கின்றேன்…

நன்றி வணக்கம்…..
துரை மாணிக்கம்


வணக்கம் அம்மா

தமிழன்னை ஈன்றெடுத்த
தமிழ் மகளாய்!
தமிழன்னை புகழ்
பாடும் தலைமகளாய்!

தமிழ் தொண்டில்
நாட்டம் கொண்டு!
முத்தமிழையும்
மூச்சாய்க் கொண்டு!

புதுகையில் புதுமை
செய்து!
பூவிதழால் உவகை
செய்து!

பூமியெங்கும் தமிழ் மணக்க
பூவாய் தினம் பூத்து குலுங்க
தேனாய் யாவரும்
அள்ளிப் பருக!
தேனீயாய் தமிழ்த்தேன்
சேர்க்கும் தேன்தமிழே!

விருது கொடுத்து
விருந்து கொடுத்த
தமிழ் கொடைக்கு நன்றி!
அதற்கு உடன் இருந்த உங்கள்
தமிழ்ப் படைக்கு நன்றி!

என்றும் உங்கள் பணி தொடர என் பணிவான வணக்கமும்…கனிவான வாழ்த்துகளும்….

தமிழ்த் தொண்டு செய்ய
தயாராய் இருக்கும் இந்த இளையவளுக்கு…. முத்தமிழ்ச் சங்கத்தில் இணைய வாய்ப்பு இருந்தால் வழங்குங்கள்!


சுகுமாரி பாலையா
இந்தக் கவிதை எழுதியவர்